நாமக்கல், ஜூன் 17-
நாமக்கல் அருகே 35 குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் அருகே ரெட்டிபட்டியல் கே.கே.பி என்ற தனியார் நூற்பாலையில் செய்ல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக, அம்மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர், தேசிய குழந்தை தொழிலாளர்கள், கே.கே.பி நூற்பாலையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 32 பெண் குழந்தைகள் உட்பட 35 குழந்தை தொழிலாளர்கள் நூற்பாலையில் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.  இதைத்தொடர்நது குழந்தை தொழிலாளர்களை மீட்ட அதிகாரிகள், இதுகுறித்து நூற்பாலை மேலாளர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.