காந்தி நகர், ஜூன் 16-
குஜராத் மாநிலம், அகமதாபாத் பகுதியில் கருப்பை குழாய் வாய் இல்லாமல் பிறந்த  பெண்ணுக்கு 20 வயதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை முறையில் கருப்பை வாய்க்குழாய் உருவாக்கப்பட்டுள்ளது.
சின்ட்ரோம் (எம்.ஆர்.கே.எச்) எனப்படும் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கக்கூடிய அறிய வகை நோய் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் உரிய வளர்ச்சி அடையாமலோ அல்லது இல்லாமலோ இருக்கும். அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த ஹீடல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறக்கும் போதே கருப்பை வாய்க்குழாய், கருப்பை  வாய் மற்றும் கருப்பை இல்லாமல் பிறந்திருக்கிறார். தற்போது 20 வயதில் இருக்கும் ஹீடலுக்கு மேயர் ராக்கிடான்சி- குஸ்டெர்- ஹாசர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பிறக்கும் போதே இத்தகைய குறைபாட்டுடன் பிறந்த ஹீட்டலை
குஜராத் மருத்துவர். அஜேஷ் தேசாயிடம் பரிசோதித்த போது அவர் 4,500 பெண்களுக்கு ஒருவர் இந்த எம்.ஆர்.கே.எச் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி ஹீட்டலின் பெற்றோருக்கு நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் அவர்  ஒரே ஒரு சிறுநீரகத்துடன் இருக்கிறார். அந்த சிறுநீரகம்  கருப்பை வாய்க்குழாய்க்கு மிக அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது சிறு நீரகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் இந்த அறுவை சிகிச்சை ஆபத்தான ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் , 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அந்த பெண்ணால் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெறக்கூடிய தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.