ஐதராபாத், ஜூன் 15-
தெலுங்கானா மாநிலத்தில், சாக்கடை கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தெலங்கானா அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், அம்பர்பேட்டில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வக சோதனைக்கு அனுப்பியதில் அதில் போலியோ வைரஸ் டைப் – 2 இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில அரசின் தலைமை செயலாளர் ராஜேஸ் திவாரி தெரிவித்தார் .
இதனையடுத்து அம்மாநில அரசு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஜூன் 20 முதல் ஜூன் 26 -ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த உள்ளதாகவும், அதில் 6 மாதம் முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கவுள்ளதாகவும் கூறினார்.
மேலும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டு முதல்  5 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு எந்த குழந்தைக்ககும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீண்டும் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.