போபால், ஜூன் 13-

மத்திய பிரதேச மாநிலத்தில், இன்று(திங்கள் கிழமை) ரயில் எஞ்சின் மீது ஏறி உயர்மின் அழுத்தக்கம்பியை பிடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து, ரயில்வே காவல் துறை பொறுப்பாளர், பல்வந்த் சிங் கௌரவ் கூறுகையில், சரக்கு ரயிலின் ஓட்டுனர், ரயிலின் முன் பெண் ஒருவர் வந்து கொண்டிருப்பது தெரிந்து பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். அதன் பின்னர் உடனடியாக அந்தப்பெண் ரயில் எஞ்சின் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை தனது வெறும் கையினால் பிடித்துள்ளார். மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததாக கூறினார். மேலும் அந்தப் பெண் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Leave A Reply

%d bloggers like this: