நீலகிரி, ஜூன் 13-

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் அருகே கடந்த 3 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இன்று(திங்கள் கிழமை) உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் சின்னவண்டிசோலை பகுதியில் கடந்த 3 நாட்களாக காலில் காயத்துடன் சிறுத்தை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுத்தையை பிடிப்பதற்காக இறைச்சியுடன் கூடிய கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இரவு முழுவதும் கூண்டில் சிக்காத சிறுத்தை இன்று காலை ஓடையில் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. மேலும் காலில் காயத்துடன் 15 மணி நேரமாக தண்ணீரில் இருந்ததால் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: