தஞ்சாவூர், ஜூன் 12-
தஞ்சாவூர் மாவட்டம், காவிரியில்   தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் குறுவை சாகுபடி செய்வதற்காக காவிரியாற்றிலிருந்து  ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இதுவரை காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடாததால் புரட்சிகர விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை சேர்ந்த விவசாயிகள் போராட்டாத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லணையில் இறங்கி போராட்டம் நடத்த முயற்சித்த போது காவல்துறையினரால் அடித்து இழுத்துவரபப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: