சண்டிகர், ஜூன் 8-

அரியானா மாநிலம், குர்கான் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குர்கான் நகரின் மேவாத் பகுதியில்  உள்ள எஸ்.எச்.கே.எம் அரசு மருத்துவ கல்லூரியில், கடந்த திங்கள் கிழமையன்று 22 வயது பெண் மன அழுத்தத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் 5-வது மாடியில் இருந்து மருத்துவமனையின் உதவியாளரால் இரவு 11.30 மணியளவில் அறையிலிருந்து வெளியே வரும்படி கூறியிருக்கிறார். அப்போது அந்த பெண் தனது குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக கீழே இறங்கி வந்த போது அந்த உதவியாளர் மற்றும் பாதுகாவலரால் காலியறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரின் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து எஸ்.எச்.கே.எம் மருத்துவமனை இயக்குனர், மருத்துவர்.சன்சார்சந்த் சர்மா கூறுகையில், இது ஒரு அதிர்ச்சியான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்று கூறினார். மேலும் குற்றவாளிகளை பணியிலிருந்து நீக்கி விட்டதாகவும், காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.