பெங்களூரு, ஜூன் 2 –
8 மணி நேர வேலை மற்றும் வார விடுமுறை ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, கர்நாடக போலீசாரின் போராட்டம் தொடரும் என்று கர்நாடக போலீஸ் மகாசங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில போலீசார், தங்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண் டும்; வார விடுமுறை விடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தங்களின் போராட்டம் தொட ரும் என்று இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் கர்நாடக போலீஸ் மகா சங்கம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இரவு பகல் பாராது 12 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் கடுமை யாக பணிபுரிகின்றனர். தில்லியி லிருந்து கன்னியாகுமரி வரை இதே நிலைதான் உள்ளது. எந்த மாநிலத்திலும் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதே கிடை யாது. பல ஷிப்ட்கள் தொடர்ந்து வேலை பார்க்கும் நிலைதான் உள்ளது. வார விடுமுறை என்பதே ஒரு ஆடம்பரம் போல் ஆகிவிட்டது.

இது தொடர்பாக தேசிய போலீஸ் சீர்திருத்தங்கள் ஆணை யம் தனது பரிந்துரைகளை பல ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அரசின் உள்துறைக்கு சமர்ப்பித்துவிட்டது.

அந்த பரிந்துரைகளில் முக்கிய மானது, போலீசாருக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதாகும். அப்போதுதான் அவர்கள் தங்களின் 8 மணிநேரப் பணியை முழு கவனத் துடன் மேற்கொள்ள முடியும்; அவர்களின் உடல் நிலையை பாதுகாப்பு பணிக்கேற்ப பராமரிக்க முடியும்; தங்களது குடும் பத்தினருக்கு ஓய்வு நேரத்தை செலவழிக்க முடியும் என்று ஆணையம் விளக்கியது. இரண்டாவது, போலீசாரின்பணிச்சுமையை குறைப்பது ஆகும்.

அதாவது, சட்டம் – ஒழுங்கு பணியையும் குற்றவியல் பணியையும் ஒரே நேரத்தில் இரண் டையும் சேர்த்து பார்ப்பதால் அவர்கள் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. மூன் றாவதாக, போலீசாருக்கு கட்டாயம் வார விடுமுறை அளிக்கப் பட வேண்டும்; ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்தது.

ஆனால் இந்த பரிந்துரைகள் பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதே போன்று கடந்த 2011-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இன்னொரு ஆணையத்தின் அறிக்கையிலும் போலீசாரின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதுவும் உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை போலீஸாரின் எண்ணிக்கை 28 விழுக்காடு குறைவாகவே உள்ளது. 96 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் தான் உள்ளனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் வரை பணிஓய்வு பெற உள்ளனர். அரசு புதிததாக 3500 பேரை நியமிக்க உள்ளது. இது போதாது. எனவே எங்களது கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறைகளைச் சொல்லி நாடு முழுவதும் குமுறும் போலீசார்

போலீசாரின் பரிதாப நிலை குறித்து, காவல்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் 12 ஆயிரம் போலீஸ் அதிகாரிகளும் 38 ஆயிரம் காவலர்களும் உள்ளனர். இவர்கள் 12 மணி நேரம் பணிபுரிகின்றனர். இதில் பெரும்பாலும் காவலர்களுக்கு 15 மணி நேரம் வரை பணி நேரம் உண்டு.

நகர போலீசாரை விட கிராமங்களில் பணிபுரியும் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமைகள் உள்ளன; அவர்கள் ஒரு சில மணி நேரம் சொந்த வேலைகளுக்குச் செல்லக்கூட தலைமை அதிகாரியிடம் அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும்; அதிலும் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது.

ஆந்திராவில் 5 நாட்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது; அம்மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு போலீசார் 16 மணி நேரமும் சிறப்புப் போலீசார் 12-லிருந்து 14 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசார் 14 மணி நேரம் பணிபுரிய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 மணி நேர வேலை என்பதே போலீசாரின் கனவாக உள்ளது. 25 ஆயிரம் பேருக்கு 18 ஆயிரம் பேர்தான் உள்ளனர்.

இதில் 12 ஆயிரம் பேர் வேறு பணியில் அமர்த்தப்படுகின்றனர். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஒரு தொழிற்சங்கம் அமைக்கப் பாடுபட்டு வருகிறோம். நிச்சயம் போலீசாருக்கென்று ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.