உதகை, மே 30-

உதகையின் 120-வது மலர் கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையின் 120-வது மலர் கண்காட்சி, அரசினர் தாவரவியல் பூங்காவில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது.இந்தக் கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு மணிக்கூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம் 68 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 7,500 மலர்களால் உருவாக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் மற்றும் 15,000 மலர்த்தொட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் மலர்க்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் உதகையில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பலவிதமான மலர்களை ரசித்தனர். கிட்டத்தட்ட 1.30 லட்சம் மக்கள் இந்த மலர்க்கண்காட்சியை கண்டுகளித்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த மலர்க்கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகின . தற்போது பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 3 நாட்களுக்கு மலர்க்கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave A Reply

%d bloggers like this: