கரூர், மே 29

கரூரில் இருந்து திருச்சி சென்ற ரயிலின் எஞ்சினில் இன்று( ஞாயிற்றுக் கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் இன்று காலை புலியூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது ரயிலின் எஞ்சின் பகுதியில் புகை வந்துள்ளது. இதை கவனித்த புலியூர் ஸ்டேஷன் மாஸ்டர், வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் வீரராக்கியம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது திடீரென ரயிலின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக கரூர்-திருச்சி செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயிலில் இருந்த பயணிகள்  பேருந்து மூலம் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

%d bloggers like this: