சண்டிகர், மே 26-
ஜாட் உட்பட 6 சமூகத்தின்றகான இட ஒதுக்கீடு வழங்கும் அரியானா மாநில முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளனது.
ஜாட் ஜாட்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள், முஸ்லிம் ஜாட்கள், பிஷ்னாய் பிரிவினர், ரோர்கள், த்யாகி பிரிவினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
அரியானா பிற்படுத்தப்பட்டோர் சட்டம் 2016 – அரசமைப்பு சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பி பிவானியைச் சேர்ந்த முராரி லால் குப்தா என்பவர்  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இந்த மனுவை  மீதான விசாரித்த நீதி மன்றம் உச்ச நீதிமன்றம் புதிய சட்டத்தின் கீழ் ஜாட்கள் மற்றும் பிற 5 சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவு உண்மையில் கே.சி குப்தா என்பவரது கமிஷன் அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால் அறிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்கனவே நிராகரித்து என்று முராரிலால் குப்தா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதி மன்றம் நிராகரித்த கமிஷன் அறிக்கை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மேலும், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் ஜாட்கள் சமூக, கல்வியியல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் அல்ல என்று கூறியதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியதையடுத்து நீதிபதி எஸ்.எஸ்.சரோன் தலைமையிலான அமர்வு ஜாட்கள் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: