சென்னை, மே 25-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில்  500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று  பிரேம சுதா, சிவக்குமார் ஆகிய இருவர் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 10வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவிகள்  தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.31 மணியளவில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தார தேவி வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்த நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவக்குமார் மற்றும் ராசிபுரம் குறுக்கபுரம் எஸ்.ஆர்,வி எக்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிரேம சுதா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளனர்.
498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாக கொண்டு படித்தவர்களில் உடுமலை மலையாண்டிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஜனனி முதலிடம் பிடித்துள்ளார். அதன் விவரம்: அரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  மொத்த தேர்ச்சி விகிதம் 93.6% ஆகும். இது  ஆண்டை விட கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு  தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது.  இந்தாண்டு மொத்தம் 10 லட்சம் 11 ஆயிரத்து 919 பேர் தேர்வை எழுதினர்.  இவர்களில் மாணவர்கள் 5,07,507 பேர், மாணவிகள் 5,04,412 பேர். இவர்களில்  93.6% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 91.3% ; பெண்கள் 95.9%. வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.5% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 91.3% அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதியவர்களில் 7,33,637 மாணவ, மாணவிகள் 60% மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு :

வருவாய் மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

கன்னியாகுமரி

26332

25849

98.17

414

திருநெல்வேலி

46526

44340

95.3

466

தூத்துக்குடி

25347

24569

96.93

292

ராமநாதபுரம்

17935

17415

97.1

240

சிவகங்கை

19452

18802

96.66

266

விருதுநகர்

29368

28725

97.81

336

தேனி

17148

16559

96.57

195

மதுரை

43663

41778

95.68

463

திண்டுக்கல்

27515

25471

92.57

334

ஊட்டி

9584

8937

93.25

181

திருப்பூர்

29149

27872

95.62

325

கோயம்புத்தூர்

43445

41803

96.22

515

ஈரோடு

27493

27076

98.48

347

சேலம்

49225

46374

94.21

508

நாமக்கல்

24436

23459

96

309

கிருஷ்ணகிரி

26660

25340

95.05

370

தருமபுரி

23691

22453

94.77

299

புதுக்கோட்டை

25377

23972

94.46

309

கரூர்

13526

13076

96.67

189

அரியலூர்

11539

10676

92.52

160

பெரம்பலூர்

9577

9244

96.52

136

திருச்சி

39649

38033

95.92

424

நாகப்பட்டினம்

22961

20535

89.43

270

திருவாரூர்

17816

15915

89.33

209

தஞ்சாவூர்

35042

33426

95.39

399

புதுச்சேரி

17752

16407

92.42

298

விழுப்புரம்

47546

41872

88.07

541

கடலூர்

37795

33687

89.13

406

திருவண்ணாமலை

35038

31196

89.03

477

வேலூர்

53883

46602

86.49

602

காஞ்சிபுரம்

54415

50481

92.77

591

திருவள்ளூர்

50335

45722

90.84

607

சென்னை

52668

49638

94.25

574

Leave a Reply

You must be logged in to post a comment.