சிம்லா, மே 21-
இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் தியோக் பகுதியில் பள்ளம் ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: