போபால், மே 18-

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்வில் தோல்வியடைந்த  மாணவர்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

போபால் மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா சந்தே (16) ஷாஜகானாபாத்தில் தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் யாரிடமும் சரியாக பேசாத அவர் நேற்று(செவ்வாய்க் கிழமை) பெற்றோர்கள் வெளியே போயிருந்த சமயத்தில் தனது வீட்டினுள் உள்ள சீலிங் ஃபேனில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பைராசியா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் படேல்(18) தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். சாகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜக் தேர்வினில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த அவர் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேவா பகுதியில் நேற்று 16 வயது சிறுமி தீ வைத்துக் கொண்டார் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்றாவது முறையாக 10-ம் வகுப்பு தேர்வினில் தோல்வியடைந்த ராகுல் கிரி(17) மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவங்கள்  தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.

 

 

 

 

Leave A Reply

%d bloggers like this: