சண்டிகர், மே 17-
அரியானாவில் கிணற்றை தூர்வாரச் சென்ற 5 தலித் இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் 5 பேர் இணைந்து நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: