ஸ்ரீநகர், மே 17-
காஷ்மீர் மாநித்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் கோபி யான் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.  இதனால் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டதால் இருதரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் கோபியான் மாவட்டம் பெக்லி போராவில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி பரூக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டான்.  இதே போல் குப்வாரா மாவட்டத்திலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.