அகமதாபாத், மே 16-
குஜராத் மாநிலம் கக்ராப்பூரில் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள கக்ராப்பூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: