தஞ்சை, மே 16-
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து அறவக்குறிச்சியில் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சியில் வரும் மே 23ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 25 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தஞ்சையில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு எழுந்ததைத்தொடர்ந்து ஞாயிறன்று தேர்தலை ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சையிலும் வரும் மே 23 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 25ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 232 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை 17 அல்லது 18ம் தேதி நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.