ஐதராபாத், மே 15-
தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் நேற்று(சனிக்கிழமை) டிப்பர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 7 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிலாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தருண் ஜோஷி கூறுகையில்,பாயின்ச நகரத்தில் நேற்று இரவு 18 பேர் பயணித்த ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியது. அதில் டிப்பர் ஆட்டோ மீது விழுந்த போது 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக தெரிவித்தார். படுகாயமடைந்த மற்ற மூன்று பேர் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் மகாராஷ்டிரா மாநிலம்,நன்டேட் மாவட்டத்திலுள்ள போகர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் செங்கல் சூலையில் வேலைப் பார்ப்பவர்கள் என்றும் கோவிலுக்குச் சென்ற போது இவ்விபத்து நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.