ராஞ்சி, மே 14-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆதிவாசி நலன்களை காவுகொடுக்கும் விதமாகவும், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. மேலும் சாதி, மத மோதலை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் முத்தி மோச்சா உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தது.

பந்த் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பந்தையொட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.