ஸ்ரீ நகர், மே 13-
ஜம்முவில் நேற்று(வியாழக்கிழமை) பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.2 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்முவில் உள்ள ராம்பன்,படோடே,பட்னிடாப் மற்றும் குத் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென பெய்த மழையினால் படோடே அருகே சக்க நல்லா மற்றும் பக்கு நல்லா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து திரும்பி வந்த சிறுவர்கள் ராக்கேஷ் குமார்(14),பயோலா தேவி(14) மற்றும் காலோ தேவி(5) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 2 சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றினர். இதனிடையே ரீசி மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்துல் கானி(45) மற்றும் அவருடைய மகன் இர்பான்(15) நல்லா பகுதியைக் கடக்கும் போது காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ச்சியாக 3 மணி நேரம் பெய்த இந்த கனமழையினால் மாஹூர் உட்பிரிவினில் உள்ள கிராமத்தில் சாலைகள், வீடுகள், கடைகள் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ரீசியின் காவல்துறை துணை ஆணையர் ரவீந்தர் குமார், நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.