புது டெல்லி, மே 11-
இந்தியாவில் வருடத்திற்கு 1.2 மில்லியன் மக்கள் இஸ்கியாமிக் ஸ்டோர்க்ஸ் எனப்படும் ரத்த அடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் பக்கவாதம் மற்றும் மூளை தாக்குதல்களே மரணங்கள் மற்றும் இயலாமைக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. சீனாவில் 2 மில்லியன் மக்களும், அமெரிக்காவில் 6,40,000 மக்களும், லண்டனில் 1,20,000 மக்களும் மற்றும் ஆஸ்திரேலியாவில் 40,000 மக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
100 மருத்துவமனைகளில் 3,000 நோயாளிகள் மீது நிபுணர்கள் நடத்திய  ஆய்வுகளில், உலகளவில் பொதுவாக கடுமையான ரத்த அடைப்புகளுக்கு கொடுக்கப்படும் ரீகாம்பினன்ட் டிஸ்யு பிளாஸ்மோனிஜன் ஆக்டிவேட்டர்(rtPA) எனப்படும் மருந்துகளின் அளவினை குறைத்துக் கொடுத்தால் மூளைகளில் ஏற்படும் ரத்த போக்கினை கட்டுப்படுத்தலாம். அதாவது சராசரி அளவானது உடல் எடைக்கு 0.9 மிகி/கிகி என்பதை 0.6 மிகி/கிகி என்று அளவில் குறைத்துக் கொடுத்தால் மூன்றில் இரண்டு சதவிகிதம் குறைக்கலாம் என்றும், இது பெரும்பாலான உயிர்களை காப்பாற்றும் என்று கூறியுள்ளனர்.
இந்த மருந்தின் விலை ரூ.67,000 என்றும், இது இந்தியாவில் இருக்கும் மருத்துவமனைகளில் கிடைப்பதற்கு கால தாமதம் ஆவதால் குறைந்த அளவு நோயாளிகள் மட்டுமே பயனடைகின்றனர் என்று கிரிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி பேராசிரியர் ஜெயராஜ்.டி.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ஆர்.டி.பி.ஏ வின் அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளை மானிய விகிதத்தில் பயனாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கினால் மூளைகளில் ஏற்படும் ரத்த அடைப்புகளை குறைக்கலாம் என்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றலாம் என்று கூறுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: