சண்டிகர், மே 11-
பஞ்சாப்பில் பட்டிலாலா கிராமத்தில் வங்கிக்கடனை திரும்பச் செலுத்த இயலாத விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் பட்டிலாலா கிராமத்தில் சம்ஸ்கர் சிங் கலா என்ற 43 வயது விவசாயி தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். போதியளவு வருமானமில்லாத நிலையில், தொடர்ந்து விவசாயம் செய்ய  பல வங்கிகளில் இருந்து ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை. மேலும் நாளுக்கு நாள் விவசாயம் பொய்த்து வந்த நிலையில் தனது பார்வையிழந்த மனைவிக்கு சிகிச்சையளிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்று  ஒரு பகுதி கடனை திரும்ப செலுத்தினார்.
விவசாயத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சம்ஸ்கர் சிங் திங்களன்று இரவு  மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்ஸ்கர்சிங்கின் தற்கொலை  பட்டிலாலா கிராமத்தில் இது 7வது விவசாய தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: