சிம்லா, மே 8-
இமாச்சல் பிரதேசத்தில் ஞாயிறன்று காலை நடந்த பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் ஜோஹிந்தர் நகர் பகுதியில் சுமார் 55 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையின் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்னர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்துகான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: