கவுகாத்தி, மே 7-
அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று மீண்டும் மிதமான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
மேகாலயாவின் காசி மலையில் 10 கி.மீ ஆழத்தில் இன்று மாலை 3.13 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் மேகாலயாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4ஆக பதிவானது. இந்நிலையில் அசாமில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: