ராஞ்சி, மே 5-
ஜார்கண்ட் மாநிலத்தில் பிஎட் மாணவி கல்லூரி வாயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்த சுகென்மண்டல். இவர் சோனாலி முர்மு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சோனாலி முர்முவுக்கும் சித்ரஞ்சன் துடுவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் சோனாலி முதுர்வுக்கு சுகென் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சோனாலி முர்மு திருமணத்திற்கு பின்னர் கல்லூரி ஒன்றில் பிஎட் படிப்பை தொடர்ந்தார். சோனாலியை அவரது கணவர் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரியில இறக்கி விட்டு செல்வார். இந்நிலையில் சோனாலி முர்மு புதனன்று  கல்லூரி வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுகென் மண்டல் இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்றகோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.