மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் ஆகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால். எ.கே.கோயல். ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதமானது ஆகும். கல்வி வணிகமயமாவதை அனுமதிக்க முடியாது. கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நிறுவுவது தவறானது. அரசு நன்கொடை வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறவேண்டும். மாறாக நன்கொடை அடிப்படையில் நடைபெறக்கூடாது என்று தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: