பிரேசிலியா,மே 2-
கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் இதற்கு முன்பு கருதப்பட்டதை விட மிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞானிகள் கூறுகையில், ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமான நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகிறது. பிரேசிலில் ஜிகா வைரஸ் பரவுவது குறைந்துள்ளது. ஆனாலும் இதற்கான தடுப்பு மருந்துகளுக்கான இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே
இருப்பதாகவும், மேலும் 2.2 பில்லியன் மக்கள் ஜிகா வைரஸ் தாக்கக்கூடிய ஆபத்தில் இருக்கின்றனர் என்று கூறினர்.
பெரும் பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மைக்ரோசெபலி எனப்படும் வழக்கத்துக்கு மாறாகச் சிறிய தலைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸிற்கும் இணைப்பு உள்ளது என்றும், இது மூளை வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜிகா வைரஸ் பாதித்த 20 சதவிகிதக் கர்ப்பிணி பெண்களுக்கு, கருவிலேயே மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியு இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் அளித்த தகவலின் படி ஜிகா வைரஸ் பாதித்த 29 சதவிகிதக் கர்ப்பிணி பெண்களுக்கு, ஸ்கேனிலேயே அசாதாரண அமைப்புகளுடனும், வளர்ச்சி பாதித்த வகையிலும் கருவினில் குழந்தைகள் இருப்பது தெரிவதாகக் கூறுகிறது.
கருவில் இருக்கும் குழந்தைகளைக் கூடப் பாதிப்பது மிகப்பெரிய தாக்கமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.