சண்டிகர், ஏப்.30-
அரியானாவில் திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலங்கள் திருமண நிகழ்ச்சிகளின் போது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆடல் பாடலுடன் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் சில பகுதிகளில் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற திருமண நிகழ்ச்சிக்கான கொண்டாடத்தில் துப்பாக்கியால் சுடும்போது போது பலர் காயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற ஒரு திருமண வரவேற்புக் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அப்போது மகிழ்ச்சிப்பெருக்கில் இருந்த ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். எதிர்பாராத விதமாக மணமகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த மணமகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை downloadஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: