டெல்லி, ஏப்.29-
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொதுச்சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் அலட்சியம் செய்து வருவதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராம் கோபால் யாதவ் கூறுகையில்,  திட்டமிட்ட நிதிக்கும், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதிக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்து. இதில் 1.2% தான் இதுவரை அரசு செலவு செய்திருக்கிறது. மத்திய அரசு நிதி நெருக்கடிகளில் உள்ள ஒவ்வொரு முறையும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத் துறையில் தான் கை வைக்கிறது.
இதனால் நாட்டு மக்களின் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பன்னிரெண்டாம் ஐந்தாண்டு (2012-17) திட்டத்தின் கீழ் வழங்க திட்டமிடப்பட்ட தொகையில் 45 சதவீத நிதி மட்டுமே சுகாதாரத் துறைக்கு இதுவரை சென்றடைந்திருக்கிறது. போதிய நிதி ஒதுக்கப்படாததால் மக்களின் ஆரோக்கியம் பிரச்சனைக்குரியதாக இருப்பதாக நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முதன்மை சுகாதாரப் பராமரிப்பு மோடி அரசின் அலட்சியம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலத்தில் 147% அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை எட்ட முடியும் என்று கூறியுள்ள அக்குழு, இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.