நம்மோடு ஒட்டி உறவாடும் மொபைல் போனை ஏதேனும் ஒரு வேளையில் தொலைத்துவிட நேர்ந்தால் என்ன ஆகும். “வித்தா பாதிவிலைக்குக் கூடப் போகாது” என்று ‍மொபைலின் விலையைக் கூறி ஒதுக்கி விடமுடியுமா? நாம் தொலைத்தது போன் மட்டுமல்லவே, ஆண்டுக்கணக்காய் சேகரித்து வைத்திருக்கும் மொபைல் எண்கள், நம்முடையமறக்க முடியாத போட்டோ, வீடியோ மற்றும் செல்ஃபி அனுபவங்களுடன் நம்மு‍டைய வங்கிக்கணக்கு விபரங்கள், மின்னஞ்சல்,சமூக வலைத்தள கணக்குகளையும் சேர்த்தே அல்லவா தொலைத்துவிடுகிறோம். இதற்கு விலையை நிர்ணயிக்க முடியுமா நம்மால்?‍போனைத் தொலைத்த பிறகு வருத்தப்படுவதைவிட அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக‍ போனில் உள்ள விபரங்களை பேக்கப் செய்து ‍வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது. போனில் உள்ளதைதவிர்த்து தனியாக வைத்திருக்கும் மெமரி கார்டுகள், பென்டிரைவ், லேப்டாப், மோஜக் கணினிகள் அல்லது மின்னஞ்சல் கணக்குகளில் மாதம் ஒருமுறைபோன் விபரங்களை பேக்கப் எடுத்துக் கொள்வதை தொடர்ச்சியான பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். போன் தொலைந்து ‍போவதுமட்டுமல்ல, கீழே விழுந்து உடைந்து போகும் நிலை ஏற்பட்டாலும்கூட பேக்கப் செய்த டேட்டாக்கள் உதவியாக இருக்கும்.
போன் லாக்
போனில் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளான பேட்டன் லாக், பின் லாக் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளவும். அத்துடன் போனில் உள்ள என்கிரிப்ட் வசதியையும் இயக்கத்தில் வைக்கவும். இது ஸ்கிரீன் லாக் ஆப்ஷனுக்கு கீழேயேகொடுக்கப்பட்டிருக்கும். இதனை இயக்குவதன் மூலம் வேறு நபர்கள் நம்முடைய சொந்த விபரங்களை பார்க்க முடியாதவகையில் தடுக்கலாம். நீங்கள் டிகிரிப்ட் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே இதனை திறக்க இயலும்.மொபைல் தொலைந்தவுடன் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வங்கிக்கணக்கின் பின் எண், இணையக்கணக்கு பாஸ்வேர்டு, கூகுள் கணக்கு பாஸ்வேர்டு உள்ளிட்ட நீங்கள்மொபைல் மூலமாகப் பயன்படுத்தும் அனைத்துக் கணக்குகளின் பாஸ்வேர்டுக‍ளையும் மாற்றி விடுங்கள்.அடுத்ததாக உங்கள்மொபைல் சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தில் சிம் தொலைந்ததை புகாராக பதிவு செய்து சிம் எண்ணை லாக் செய்யவும்.
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் செட்டிங்ஸ்
உங்கள் மொபைலில் உள்ள “கூகுள் செட்டிங்ஸ்” என்ற ஐகானைக் கிளிக் செய்யுங்கள். இந்த ஐகான் ழு என்ற எழுத்துடன் காட்டப்படும். திறக்கும் பட்டியலில் “லொகேஷன்” ஆப்ஷனில் உள்ள கூகுள் லொகேஷன் `ஹிஸ்டரிக்குள் உள்ள “லொகேஷன் `ஹிஸ்டரி(location history)” ” ஆப்ஷனை டிக்செய்து கொள்ளுங்கள். பிறகு மீண்டும் முந்தைய பட்டியலுக்கு சென்று அதில் செக்யூரிட்டி என்ற ஆப்ஷன்ஸில் நுழைந்து ‘டிவைஸ் மேனேஜர்’ என்பதின் கீழ் ““Remotely locate this device”
– “Allow remote lock and erase” ஆகியவற்றைடிக் செய்துகொள்ளுங்கள். இனி உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகளைப்பயன்படுத்தலாம்.உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆன்” நிலையில், போதுமான சிக்னலும் இருந்தால் வேறொரு மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் இன்ஸ்டால் செய்தோ அல்லதுகணினியின் மூலமாகவோ, android.com/ devicemanager என்ற முகவரியில் உங்களது கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்தி நுழைந்தால், கூகுள் மேப்பில் உங்களது மொபைலின் இருப்பிடம் காட்டப்படும்.அது‍வே உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆப்” நிலையிலிருந்தால் லொகேஷன் `ஹிஸ்டரிக்குள் சென்று, கடைசியாக மொபைல் இயக்கத்திலிருந்த‍போது எங்கிருந்தது என்பதை அறியலாம். இதனை google.com/settings/accounthistory க்குள் சென்று பிளேசஸ் யூ கோ (Places you go ) என்பதைக் கிளிக் செய்து மேனேஜ் `ஹிஸ்டரியை கிளிக் செய்து காணலாம். இதில் கடைசியாக உங்கள் மொபைல் பயன்படுத்தப்பட்ட இடங்களைக் குறித்து அறிந்து கொள்ளலாம்.இது அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் உள்ள அடிப்படை வசதியாகும்.

 

எம். கண்ணன், என். ராஜேந்திரன்

Leave A Reply

%d bloggers like this: