காந்தி நகர், ஏப்ரல் 26-
குஜராத்தில் நேற்று(திங்கள் கிழமை) மாலை மூன்று வயது குழந்தை,500 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானது. அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள ஜுனா ஞான்சியாமகத் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இருந்த 500 அடி ஆழ் துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. இதனை அறிந்த அக்குழந்தையின் பெற்றோர் தகவல் கொடுத்ததையடுத்து தேசிய பேரிடர் நிவாரண படையினர், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், கயிறு மற்றும் பிராண வாயு சிலிண்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 100-வது அடியில் மாட்டிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரழந்தது.

Leave A Reply

%d bloggers like this: