_89383989_babyகான்பெர்ரா, ஏப்ரல் 22-
ஆராய்ச்சிகளின் படி குழந்தைகளுக்கு வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்களுக்கும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கும்,  பறேசோவைரஸ் எனக்கூறப்படும் புதிய வகை வைரஸ் கிருமிகளே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் 100 குழந்தைகளுக்கு மேல் 2013 மற்றும 2014-ம் ஆண்டுகளில் பறேசோவைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு வருடத்திற்கு பின்னர், அந்த குழந்தைகளுக்கு வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சமீபத்திய ஆஸ்திரலேசியனின் சொசைட்டி ஃபார் இன்பெக்ஷியஸ் டிசீசஸ் (ஏ.எஸ்.ஐ.டி) என்ற அமைப்பின்  ஆய்வின் படி தெரியவந்துள்ளது.
இதற்கென தனிப்பட்ட சிகிச்சைகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது என்றும் இந்த வைரஸ் பாதித்த குழந்தைகளுக்கு, வலிப்பு நோய், உடலில் எரிச்சல், தசை இழுப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் என்று ஏ.எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.
மேலும் இது ஒரு புதிய வகையான நோய்க்கிறுமி என்றும் குழந்தைகளுக்கு வரும் இந்த தொற்றுகளினால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகளை பற்றி அறிந்துகொள்ளவும் மற்றும் முடிவெடுக்கவும் இந்த ஆய்வுகள் உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஏ.எஸ்.ஐ.டியை பொறுத்தவரை இந்த வைரஸிற்கான அறிகுறிகள் ஐரோப்பாவில் 10 வருடங்களுக்கு முன்னரே தென்பட்டதாகவும், எனினும் சமீபத்திய பதிவுகளின் படி 2013-ம் வருடம் ஆஸ்திரலேயாவின் சிட்னியில் 100 குழந்தைகள் இந்த வைரஸிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 70 சதவிகித குழந்தைகளுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இது வளர்ந்து வரும் தொற்று நோய்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்று பேராசிரியர் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
மேலும் இந்த கிருமிகளுக்கு தடுப்பு மருந்தோ, தனிப்பட்ட சிகிச்சையோ கிடையாது என்றும், நாம் எதிர்பார்க்காத இந்த தொற்றுகள் ஆஸ்திரேலியாவுல் ஏற்படும் திடீர் நிகழ்வுகளாக இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த பறேசோவைரஸ் கிருமி தொற்றுகள் உமிழ் நீர், தும்மல் போன்ற உடலில் உண்டாகக்கூடிய திரவங்களால் பரவுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: