கவுகாத்தி, ஏப்.22-
அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தில் தவாங் பகுதியில் வெள்ளியன்று திடீரென மண் சரிவு  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பலர் பூமிக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: