வாஷிங்டன், ஏப்ரல் 21-
ஆய்வகத்தில் இருக்கும் எலியை விண்வெளிக்கு அனுப்பிய பின்னர் 2 வாரங்கள் கழித்து பூமிக்கு திரும்பியபோது அந்த எலிக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் மனிதர்களுக்கு எந்த விதமான பதிப்புக்களை உண்டாக்கும் என்பது குறித்து கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம், விண்வெளியில் இருக்கும் குறுங்கோள்களில்  2030-ம் ஆண்டுகளில் மனிதர்களை நீண்ட நாட்கள் தங்க வைப்பது குறித்தும் ,நீண்ட கால விண்வெளிப்பயணங்களால் மனித உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றது. மேலும் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி 340 நாட்கள் தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பிய பின்னர் நீரிழிவு நோய்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் விரைவில் அதனை சரி செய்து கொள்வர். ஆனால்  2011-ம் ஆண்டு ஸ்பேஸ் சட்டிள் அட்லாண்டிஸ் எனப்படும் அட்லாண்டிஸ் விண்ணோடத்தின் மூலம் எலியை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு 13.5 நாட்கள் தங்கியிருந்தது. பின்னர் பூமிக்கு திரும்பிய போது அந்த எலியினுடைய கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ளதாகவும், ரெட்டினாலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது.
விண்வெளி விமானத்தில் செல்லும் போது மனிதர்களுக்கு எலும்புத் தேய்மானம், தசைகளில் தேய்மானம், பார்வையில் குறைபாடுகள், மூளை செயல்திறனில் மாற்றம் போன்ற குறைபாடுகள் ஏற்படும் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்நிலையில் விண்வெளி விமானத்தில் இருக்கும் சில செல்கள் நீண்ட கால உறுப்பு சேதங்களை தூண்டுவதாக தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கோலோரடோ அனுஸ்சுட்ஸ் மெடிக்கல் கேம்பஸ் பல்கலைகழகத்தின் இயற்பியலாளர் மற்றும் மயக்கமருந்தியலின் இணை பேராசிரியர் கரேன் ஜோன்சர் கூறுகையில், அந்த எலிக்கு கல்லீரல் பாதிப்பு சரியாவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் 13.5 நாட்கள் விண்வெளியில்  தங்கியிருந்த எலிக்கு இந்த நிலை ஏற்பட்டால் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் நிலை என்னாகும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: