காந்தி நகர், ஏப்ரல் 20-
அகமதாபாத்திலிருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் 125 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் அகமதாபாத்திலிருந்து மும்பை புறப்பட்ட போது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு விமான நிலைய அதிகாரிகளால் தனி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் பயணிகளின் உடைமைகள் மற்றும் விமானம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் 125 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் மார்ச் மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.