இராமநாதபுரம், ஏப்.19-
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பி.ராஜ்குமார், இராமநாதபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிங்கை ஜின்னா, திருவாடானை தொகுதி தேமுதிக வேட்பாளர் மணிமாறன் ஆகியோரை ஆதரித்து சாயல்குடி, கீழக்கரை, இராமநாதபுரம், தொண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் தேமுதிக மாநில மகளிரணித் தலைவர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார்.
பிரச்சாரக் கூட்டங்களில் மதிமுக மாவட்டச் செயலாளர் கே.ஏ.எம்.குணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, தேமுதிக மாவட்டச்செயலாளரும் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான சிங்கை ஜின்னா, தமாகா மாவட்டத் தலைவர் ரங்கநாதன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் முருகபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி சகுபர்சாதிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், எம்.முத்துராமு, வி.மயில்வாகணன், கே.கருணாகரன், எம்.ராஜ்குமார், சி.ஆர்.செந்தில்வேல், கே.குணசேகரன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.