இராமநாதபுரம், ஏப்.19-
இராமநாதபுரம் அருகே பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் தபால் அலுவலக தெருவைச் சேர்ந்தவர் நாகநாதன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அழகு ராணி (45). சத்துணவு உதவியாளராக உள்ளார்.
இவர்களது மகன் குருசக்தி சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த அழகுராணி வீட்டை பூட்டி விட்டு நயினார்கோவில் அருகே உள்ள தவளைகுளம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அழகு ராணியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் தங்க நகைகளை கொள்ளைய டித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: