கேங்டாக், ஏப்ரல் 17-
இந்தியாவின் வடகிழக்கு பகுதியான சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் ( என்.ஐ.டி) 15 டெராபிளாப்ஸ் திறன் கொண்ட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் நிறுவப்பட்டிருக்கிறது.
நவீன கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ( சி-டி ஏ.சி ) மற்றும் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்த பரம்கஞ்சன்ஜங்கர் என்ற அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியிருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்.
இது பற்றி சிக்கிம் தேசிய தொழில் நுட்ப மையத்தின் இயக்குநரான பேராசிரியர் அருண் சமடர் கூறியதாவது: வடகிழக்கு பகுதியின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற தனித்தன்மையுடன், அனைத்து என்.ஐ.டி.களிலும் இருப்பதை விட அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
நவீன இன்டெல் பிராசஸர் தொழில் நுட்பத்துடன் 15 டெராபிளாப்ஸ் திறனுடன் அனைத்து மட்டத்திலான ஆய்வுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மின்சாரம் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதி ஆகிய உட்கட்டமைப்புகள் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டிருக்கிறது.
புனே நவீன கணினி தொழில் நுட்ப மேம்பாட்டு மையத்தின் (சி-டி.ஏ.சி.) செயல் இயக்குநர் ஹேமந்த் தர்பாரி இது குறித்து கூறியிருப்பதாவது : சீரியல் கம்ப்யூட்டிங்கில் மிக பெரிய சவால்களை தீர்ப்பதற்காக இந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் திறனில் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரையிலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட எண்ணெய் குழாய்கள் வழியே வரும் எரிபொருளின் இயக்க திறனை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து என்.ஐ.டி.யின் 2 ஆசிரியர்கள் இதற்கு முன்பே ஆய்வு செய்து உள்ளனர் என்று கூறினார்.
மேலும், சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிட்டு, பருவகால நிலையை முன்கூட்டியே அறிவதற்கான முயற்சிக்கான திடட்மும் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த சூப்பர் கம்யூட்டரை பயன்படுத்தி பல்வேறு புதிய செயலிகளை மாணவர்கள் உருவாக்க இருக்கின்றனர். அது சுற்றுலா, சாலை வசதி உள்ளிட்வற்றிக்கான பிரத்யோகமாக உருவாக்கப்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.