பாட்னா, ஏப்ரல் 17-
பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த சாலை விபத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இன்று வாரனாசியிலிருந்து பீகார் மாநிலத்திலிருக்கும் கயா நகரத்திற்கு  சுற்றுலா சென்ற பயணிகள் வாகனம் எதிரே நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்,மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் பலியானதாகவும், மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.