சஹர்சா, ஏப். 17-
பீகார் மாநிலம், சஹர்சா மாவட்டத்தில் ஆளும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஜப்ரா தோலா பகுதியில் வசித்துவரும் உள்ளூர் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவரான ஷியாம் சுந்தர் தன்ட்டி என்பவர் வீட்டுக்கு இன்று காலை வந்த சிலர், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடினர். குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஷியாம் சுந்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சஹர்சா நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: