ஈரோடு, ஏப். 16-
ஈரோடு அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற 4 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரவணக்குமார் அவரது மனைவி வேதவள்ளி மகள்கள் பவித்ரா, நர்மதா ஆகியோர் ஈரேடு கூடக்கரை கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.