தேனி, ஏப். 15-
ஆண்டிபட்டி தொகுதியில் மின்சார வசதியில்லாத இரண்டு வாக்குச் சாவடிகளில், ஜெனரேட்டர் அமைத்து வாக்குப் பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள அரசரடி மலை கிராமத்தில் 1,059 வாக்காளர்களும், வெள்ளிமலையில் 72 வாக்களர்களும் உள்ளனர். இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. இங்கு சூரியசக்தி மின் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேர்தலின் போது அரசரடியில் ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும், வெள்ளிமலையில் தனியார் பள்ளியிலும் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்கின்றனர்.
இந்த வாக்குச் சாவடிகளில் ஜெனரேட்டர் அமைத்து வாக்குப் பதிவு நடைபெறும். வரும் மே 16-ஆம் தேதி நடைபெறும் தேர்தலை முன்னிட்டு அரசரடி மற்றும் வெள்ளிமலை வாக்குச் சாவடிகளில் வழக்கம் போல் ஜெனரேட்டர் அமைத்து வாக்குப் பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: