மானாமதுரை, ஏப்.15-
மானாமதுரையில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியராஜ், மானாமதுரை- அரிமண்டபம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த நகர் பேருந்து கடந்த ஒருமாதமாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்பது கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வருகின்றனர். எனவே பேருந்தை உடனடியாக இயக்கவேண்டுமென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.