ராய்கர், ஏப்ரல் 15-
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் கரடி தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், புல் சிங்(50) மற்றும் அவரது மகன் குதும்(21) நேற்று(வியாழக்கிழமை), அடுத்த வாரம் நடக்கவிருக்கும் குதும்பின் திருமண நிகழ்ச்சிக்கான மண்டபம் அமைப்பதற்காக மரக்கட்டைகளை சேகரிக்க கேவலி கிராமத்திற்கு அருகில் இருக்கும் காட்டுக்குள் சென்றனர். நெடுநேரம் ஆகியும்  அவர்கள் திரும்பி வராததால் கிராம பகுதியினர் காட்டுக்குள் சென்று பார்த்த போது அவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து காவல்துறையினர் சென்று விசாரித்ததில் இரண்டு- மூன்று கரடிகள் தாக்கி உயிரழந்தாக எஸ்.டி.ஒ.பி அசோக் வடகயோங்கர் கூறினார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.
.

Leave A Reply

%d bloggers like this: