லக்னோ, ஏப்ரல் 15-
உத்திர பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் சமையல் அடுப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சுமி என்ற பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், ஜலாலாபாத் பகுதியில் லட்சுமி அவரது வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்த போது சமையல் அடுப்பில் ஏற்பட்ட தீ மலமல வென்று ஓலைக்கூரையினால் அமைக்கப்பட்ட வீட்டுக்குள் பரவியதில் லட்சுமி மற்றும் அவரது குழந்தைகளான ஆருசி,ஆகாஷ், தீபக் என்ற மூன்று குழந்தைகளும் உயிரழந்ததாக கூறினர். மேலும் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: