திண்டுக்கல். ஏப்.14
வேடசந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணி மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திண்டுக்கல் மாவட்ட மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், மதிமுக நகர் செயலாளர் செல்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, சிபிஐ மாவட்டச் செயலாளர் க.சந்தானம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேட்பாளருடன் தேமுதிக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கார்மேகம், துணைச் செயலாளர் சதீஸ்குமார், சண்முகம், சி.மணிமாறன் ஆகியோர் வந்திருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்த வேட்பாளர் எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியனை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.ஆர்.முத்துச்சாமி, சி.குணசேகரன், பி.வசந்தாமணி, ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணி,கே.ஆர்.பாலாஜி ஆகியோர் வரவேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: