இராமநாதபுரம், ஏப்.14-
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு அமைப்பு தினம் திருவாடனை மற்றும் உத்தரகோசமங்கையில் கடைப்பிடிக்கப்பட்டது. திருவாடனையில் தாலுகா தலைவர் ஆர்.சேதுராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்துராமு, ஏ.நாகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.குணசேகரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம், பூபாலன், போஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
உத்தரகோசமங்கையில் தாலுகா தலைவர் பி.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற அமைப்பு தினக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.முத்துராமு, தாலுகா நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: