பழநி, ஏப்.14-
பழநி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பழநியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பண விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிமுக முன்னாள் நகர் செயலாளர் மாரியப்பன், பழநி நகர் செயலாளர் முருகானந்தம், தொகுதிச் செயலாளர் மகுடீஸ்வரன் மற்றும் செல்வம் ஆகியோர் மீது பழநி அடிவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: