சென்னை, ஏப். 14 –
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை கூட்டணித் தலைவர்கள் வியாழனன்று மாலை செய்தியாளர்களிடையே வெளியிட்டனர்.
104 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, வேட்பாளர்களோடு சேர்த்து தொகுதிப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணி கட்சிகளான மதிமுக(29), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(25), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(25), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(25) மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (26) ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள், உடன்பாடு ஏற்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா ஆகிய கட்சிகளுக்கிடையில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான உடன் பாட்டில் தேமுதிக சார்பில் அதன் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ மற்றும் அந்தந்த கட்சிகளின் சார்பில் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
போட்டியிடும் தொகுதிகளின் பட்டி யலைவெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்தனர்.
மதிமுக போட்டியிடும் தொகுதிகளுக் கான வேட்பாளர் நேர்காணல் வெள்ளி யன்று நடைபெற்று, சனிக்கிழமை அக்கட்சி யின் பொதுச் செயலாளர் வைகோ தனது பிரச்சாரத்தை துவங்கும் போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஏப்ரல் 17 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அக்கூட்
டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய் யப்பட்டு அன்று மாலையோ அல்லது ஏப்ரல் 18 காலையோ வெளியிடப்படும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதேபோன்று தொல். திருமாவளவன், இரா.முத்தரசன் மற்றும் தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் ஆகியோரும் வேட்பாளர் நேர்காணல் மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடைபெற்று, பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.